kalangkukiren en manathinile

கலங்குகிறேன் என்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கலங்குகிறேன் என் மனதினிலே,
திகைக்கின்றேன் இச்சமயத்திலே,
பதறுகிறேன் என் உள்ளத்திலே,
விதையும் உம் வார்த்தையை!
திகில் அற்றுப்போக மதிலாகும்;
பயமற்றுப் போக துணையாகும்.
துணிவோடு அடியெடுக்க,
பரிவோடு திடப்படுத்தும்;
கரம் பிடித்து நடத்தும்!
மாற்றுவீர் மனித நிந்தைகளை,
ஆற்றுவீர் ஆறாக் காயங்களை!
மன பாரம் இறக்கிவிட,
மனதெல்லாம் இலேசாக,
மனதினில் நீர் நிறையும்!
மகிழ்கின்றேன் உம் வார்த்தையிலே
பயம் மறந்தேன் நான் சுகமானேன்
எதிர் கொள்வேன் நான் இனியெதையும்
துதித்திடுவேன் என்றென்றுமே
கலங்குகிறேன் என் மனதினிலே பாடல் வரிகள், Kalangugiren En manathinilae Lyrics. Tamil songs