Kallarai Kaavalail Kaayamudan

கல்லறைக் காவலில் காயமுடன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கல்லறைக் காவலில் காயமுடன்
கடும் அசுத்தாவி பிடித்தோனவன்
கனிவுடன் இயேசுவைப் பணிந்து நின்றான்
1. விலங் கொடிக்கும் கொடும் லேகியோனவன் – இனி
வேதனை வேண்டாமென்றான்
விரட்டும் எம்மை பன்றிகளுள் என்றன் பேய்களுமே – கல்லறை
2. கட்டளை பெற்று பன்றிக் கூட்டத்துள் செல்ல – அவை
கடலினில் மாய்ந்தனவே
கரைதனில் பேய் பிடித்தோன் சுகமடைந்தான் உடனே – கல்லறை
3. அதிசய நோய் பேய்களெல்லாம் இயேசு
நாதனைக் கண்டோடும்
அவரையே நீ நம்புவாயானால் ஆதரிப்பார் உன்னையே – கல்லறை