Kallum Karaium Lyrics

கல்லும் கரையும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கல்லும் கரையும், கல்வாரி மலையில்,
கர்த்தரின் சமுகத்திலே…
முள்ளும் குருக்கும் மறைந்து போகும்,
தேவ சமுகத்திலே…
1. மூன்றாணி முள்முடி, சிலுவையில்,
எந்தன் பாவ வினை உம்மைத் தள்ளியதோ…
கல்வாரிக் காட்சியை கண்டதும்,
எந்தன் சுயமெல்லாம் சுருண்டது…
2. இரத்தம் சொட்ட என்னை மீட்ட இரட்சகனே,
என்னை சுத்தி செய்ய உந்தன் இரத்தம் போதும்…
கல்லான இதயம் கரைந்திடும்,
சதையான இருதயம் பொருந்திடும்.
3. ஜீவனுள்ள நாளெல்லாம் நானுமே – என்
சிலுவையை எடுத்து உம் பின்வருவேன்
இயேசுவின் சீடனாய் நானிருக்க – உம்
வல்ல கிருபையைத் தந்தருளும்