kalvaris siluvaiyil thongki – Kalvaari Siluvaiyil Thongi

கல்வாரிச் சிலுவையில் தொங்கி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Lent Songs collection.

கல்வாரிச் சிலுவையில் தொங்கி – Kalvaari Siluvaiyil Thongi
1.கல்வாரிச் சிலுவையில்
தொங்கி ஜீவனை விட்டீர்;
மானிடரிதயத்தில்,
மாறுதல் உண்டாக்க நீர்
மாசற்ற ஜீவ நதி;
பாவம் போக்கத் திறந்தீர்;
எனக்காக நீர் மரித்தீர்;
கல்வாரிச் சிலுவையில்.
அக்கல்வாரி! அக்கல்வாரி!
எனக்காக யேசு மரித்தார்
கல்வாரிச் சிலுவையில்
2.இந்த அன்பின் பாசந்தான்
மீட்பருக்கு எந்தனை
முழு தத்தஞ் செய்யத்தான்,
ஆவி, ஆத்மா, நேசத்தை,
சர்வாங்க பலியாக,
அர்ப்பணித்தேன் யேசுவே
எனக்காக நீர் மரித்தீர்;
கல்வாரிச் சிலுவையில்.
3.நானுமக்குச் சொந்தமே,
என்னை ஏற்றுக்கொள்ளுமேன்;
நேச மீட்பர் நித்தமே
என்னில் வாசம் பண்ணுமேன்,
பாவத்தை வெல்லும் நெஞ்சை
நிலையாகத் தாருமேன்;
எனக்காக நீர் மரித்தீர்;
கல்வாரிச் சிலுவையில்.
4.நேசரே! நீர் பட்ட நாள்,
பூலோக அதிர்ந்தது;
குத்துண்டு மரித்ததால்
கோவே! ரட்சை வந்தது,
உம்மை நான் விடுவேனோ?
எந்தன் ஆத்ம நாயகா!
எனக்காக நீர் மரித்தீர்;
கல்வாரிச் சிலுவையில்.