kalvariye en thiyana – Kalvaariyae En Thiyana

கல்வாரியே என் தியான
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

கல்வாரியே என் தியான – Kalvaariyae En Thiyana
கல்வாரியே என் தியான இடம்
கல்நெஞ்சன் எனையும் உருக்கிவிடும்
1. காயங்களோடும் மாவேர்வையோடும்
நாளங்கள் வெடிக்க துடிக்கின்ற மீட்பன்
மா பலியாகத் தொங்கிடும் கோலம்
என் பாதங்கள் இதற்காதி மூலம்
2. மாசற்ற தேவா மா பாவி போலே
கோரக் குருசில் மரித்ததும் ஏனோ?
ஆண்டவா உந்தன் அநாதி சிநேகம்
அளவற்ற தென்றே அடிமை உணர்ந்தேன்
3. உல காரை மீட்கும் உன்னத தேவா
சிலுவையின் நிழலில் தஞ்சம் அடைந்தேன்
கள்ளனை ஏற்ற காருண்ய தேவா
களவனாம் என்னில் புது வாழ்வு தாரும்
4. முள்முடி சூடி மூன்றாணி தாங்கி
உடலெங்கும் குருதி வடிகின்ற காட்சி
மாபரனே உம் பேரருள் கூறும்
மாபாவியென்னை பரிசுத்தனாக்கும்.