kana ooril kalyana veettil – Kaana Ooril Kalyana Veettil

கானா ஊரில் கல்யாண வீட்டில்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

கானா ஊரில் கல்யாண வீட்டில் – Kaana Ooril Kalyana Veettil
நாள் 7: பொக்கிஷத்தை பெற்று கொள்ளவாருங்கள்
பாடல் 8
கானா ஊரில் கல்யாண வீட்டில்
இயேசுவும் அம்மாவும் சீடரும் சென்றாரே -2
கூட்டமாய் கூட்டமாய் மக்கள்முந்தி முந்தி ஓட
பந்தியில் பந்தியில் ரசம் குறைந்துதான் போக -2
அட அட என்ன சோதனையோ
ரசமும் இல்லா வேதனையோ
பரபர பர பரா பர பரபரப்பாய் மாற
இயேசுவும் வந்து ஜாடிகளை கண்டு
தண்ணீர் நிரப்பிட சொன்னாரே
ஜாடியில் தண்ணீர் ரசமாய் மாற
சுவையாய் எல்லாரும் குடித்தாரே – கானா
குறைகளையே எண்ணி எண்ணியே
வருத்தங்கள் ஏதும் வேண்டாம்
குறை தீர்க்கும் நல்ல நாயகன்
சுவையாய் நமக்கு என்றும் உண்டு -2
அட ட டா இல்லை சோதனையோ
அதுவே நமது நிம்மதியே
பரபர பர பரா பர பரபரப்பாய்
இனிதாய் எல்லாம் மாற
பாடுவோம் பாட்டு இனிதான பாட்டு
குறை நம்மில் இன்று தீர்ந்ததாலே
போடுவோம் தாளம் ஓசை உள்ள தாளம்
சுவை நம்மில் இன்று வந்ததாலே – கானா