Kanden Kan Kulira

கண்டேனென் கண்குளிர -கர்த்தனை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கண்டேனென் கண்குளிர கர்த்தனை
இன்று கண்டேனென் கண்குளிர
கொண்டாடும் விண்ணோர்கள்
கோமானைக் கையிலேந்திக்
1.பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும்
உண்மையாம் என் ரட்சகனை
2.தேவாதி தேவனை தேவ சேனை
ஓயாது ஸ்தோத்திரிக்கும்
ஒப்புநிகர் அற்றவனை
3.பாவேந்தர் தேடிவரும் பக்தர் பரனை
ஆவேந்தர் அடிதொழும் அன்பனை
என் இன்பனை நான்
4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை மீட்க எனை
நடத்தி வந்த மன்னவனைக்
5.மண்ணோர் இருள் போக்கும் மா மணியை
விண்ணோரும் வேண்டிநிற்கும்
விண்மணியைக் கண்மணியை
6.அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் கலிதீர்க்கும்
காரணனை பூரணனை
7.அன்னையாம் கன்னியும் ஐயனுடன்
முன்னறி யாப்பசுவின்
புல்லணையில் உன்னழகைக்