Kaneerinaal Pathathai thudaithiduvean song lyrics

கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன்
பரிசுத்த முத்தங்களால் பாதத்தை முத்தமிடுவேன்
நீரே என் நம்பிக்கை நீரே என் கோட்டை
நீரே என் கன்மலை
உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்
இயேசையா உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்
இயேசையா இயேசையா-4
உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்
இயேசையா உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்
1.அநேக ஆயிரம்
பொன் வெள்ளி பார்க்கிலும்
உமது வேதமே எனது மகிழ்ச்சியப்பா
சத்திய தெய்வம் நீர்
வேதமே சத்தியமே
வானம் பூமி ஒழிந்தாலும்
ஜீவ வார்த்தை ஒழியாது
கண்ணீரை துடைத்திடும்
காயங்கள் ஆற்றிடும்
பேரின்ப நதியே
உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்-இயேசையா
உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்-2
இயேசையா இயேசையா-4-உம்மை விட்டு
2.உமது வீட்டிலே வாசமாயிருப்பேனே
உம் துதியை பாடிடுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
உமது சமுகமே ஆனந்தம் ஆனந்தம்
நித்திய கிருபையினால்
இரக்கம் செய்தீரே
ஆ என்ன பாக்கியம்
நித்திய சந்தோஷம்
பேரின்ப நதியே
உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்-இயேசையா
உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்-2
இயேசையா இயேசையா-4-உம்மை விட்டு