kanmalaiyam en iyesu

கன்மலையாம் என் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கன்மலையாம் என் இயேசு,
என் பட்சம் நிற்கையிலே!
என்ன செய்யும் இந்த உலகம்?
என்னை அசைத்திட முடியாதே! -(2)
என் கன்மலை அவர்!
என் இரட்சிப்பும் அவர்!
என் தஞ்சமும் அவர்!
நான் அசைக்கப்படுவதே இல்லை -(2)
ஏழுமடங்கு நெருப்பு சூளையிலும்,
அக்கினி சிறிதும் என்னை தகிக்கவில்லை! -(2)
நடக்கையில் தேவன் இருக்கையில்,
ஏதும் என்னை அழிப்பதில்லை! -(2) – என் கன்மலை
சிங்கத்தின் கெபியிலே தூக்கி எறிந்தாலும்,
சேதம் ஏதும் எனக்கு நேர்வதில்லை! -(2)
இடைவிடாமல் நான் துதிக்கையில்,
தவறாமல் கிடைத்திடும் விடுதலை! -(2) – என் கன்மலை