Kanmalaiyanavar Thuthikapaduveeraga

கன்மலையானவர் துதிக்கப்படுவீராக

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

C Maj
கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக-2
நீர் என் கன்மலை என் கோட்டை
என் இரட்சகர் என் தேவன்
நான் நம்பும் துருகம் என் கேடகம்
உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு-2
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன்-2-என் கன்மலை
1.ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தரோ ஆதரவாயிருந்தீர்-2
விசாலமான இடத்திலே என்னை
கொண்டு வந்து நீர் தப்புவித்தீர்-2-என் பெலனாகிய
2.என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்
நெருக்கும் போது நான் அபயமிட்டேன்-2
உயரத்திலிருந்து உம் கரம் நீட்டி என்
கரம் பிடித்து தூக்கி விட்டீர்-2
3.கால்களை மான்களின் கால்களை போலாக்கி
உயர் ஸ்தலங்களில் என்னை நிறுத்தினீரே-2
கைகளைப் போருக்கு பழக்குவித்தீரே
வெண்கல வில்லையும் வளைத்திடுவேன்-2-என் பெலனாகிய