kanmalaiye en iyesuve

கன்மலையே என் இயேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கன்மலையே என் இயேசுவே
காப்பவரும் நீர் ஐயா
வாதை சூழ்ந்த இப்பாழ் உலகில்
வல்ல கரம் என்னை சூழ்ந்திடுதே
1.கொரோனா கொள்ளை நோய் அலைகளிலே
மனிதர்கள் சிக்குண்டு மரிக்கையிலே
சோர்ந்து போன எந்தன் மக்களையே
உயிர்பெறச் செய்யும் என் இயேசுவே.
2.போக்கையும் வரத்தையும் காப்பவரே
கைவிடாமல் காத்து நடத்துமையா
கொள்ளை நோய் எங்களை நெருக்கிடினும்
கர்த்தர் நீர் இருப்பதால் பயமில்லையே.
3.நீர் வரும் நாழிகை சமீபமே
என்பதை உணர்ந்து செயல்படவே
எங்களை தாழ்த்தி அர்ப்பணிக்க
இறைவா எங்களுக்கருள் தாருமே