Kanneerin Mozhigal song lyrics

கண்ணீரின் மொழிகள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கண்ணீரின் மொழிகள்
தேடிடும் வழிகள்
மனதின் குமுறல்கள்
அறிந்திட்ட நபர் ஒருவர்
நீங்க இயேசப்பா -3
எனக்கெல்லாம் நீங்க இயேசப்பா.
அறிந்திட்ட உயிர் நண்பன்
புரிந்திட மறந்தாலும்
பரிந்திட்ட நபர்கள் கூட
பிரிந்திட துணிந்தாலும் -2
புரிந்திட்ட நபரும் நீங்கப்பா
உமக்காய் வாழ்வேன் நான் அப்பா-2
உலகத்தின் அன்பு எல்லாம்
ஒருநாள் தணிந்து விடும்
உயிர் வைத்த காரணத்தால் தங்கிவிடும் -2
உமது அன்பு ஒன்று தான்
மாறாத அன்பு இயேசப்பா-2
வாழ்ந்திடும் வாழ்க்கை எல்லாம்
தோல்வியில் முடிந்தாலும்
வாழ்க்கையின் பயணத்திலே
பாதைகள் மறைந்தாலும் -2
நடந்திடும் தெய்வம் நீங்கப்பா
உமக்காய் வாழ்வேன் நான் அப்பா -2
கண்ணீரின் மொழிகள்
தேடிடும் வழிகள்
மனதின் குமுறல்கள்
அறிந்திட்ட நபர் ஒருவர்
நீங்க இயேசப்பா -3
எனக்கெல்லாம் நீங்க இயேசப்பா.
நன்றி இயேசப்பா.