karam parri nataththum karththar neeralloo

கரம் பற்றி நடத்தும் கர்த்தர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கண்ணீரை துடைக்கும் தேவன் நீரல்லோ
இஸ்ரவேலை காக்கும் தேவன் நீரல்லோ
என் வாழ்வின் ஆதாரம் நீரேஅல்லோ
என் மீட்பர் உயிரோடு இருக்கிறார்
என் வாழ்வில் குறைவில்லையே
என் மீட்பர் என்றும் ஜீவிக்குறார்
நான் எதற்கும் ஆஞ்சிடனே
1. கருவில் என்னை கண்ட தெய்வம்
என்னை கடைசி வரையிலும் உதவிடுவார்
என் ஜெபத்தை கேட்டதும் தெய்வம்
ஏற்ற வேலையில் பதில் அளிப்பார் – 2
காடைகள் அனுப்பிடுவார்
பாதைகள் திறந்துடுவார் – என் மீட்பர்
2. யாக்கோபே நீ அவர் தாசன்
பயப்படாதே கர்த்தரே துணை
விதைத்த கண்ணீரின் பலனை
கெம்பீரத்தோடே அறுத்திடுவார் – 2
மதில்களை தகர்த்திடுவாய்
மலைகளை நொறுக்கிடுவாய் – என் மீட்பர்
கரம் பற்றி நடத்தும் கர்த்தர் பாடல் வரிகள், Karam Patri Nadathum Karthar Neerallo Lyrics