karangal thatti paaduvom

கரங்கள் தட்டிப் பாடுவோம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கரங்கள் தட்டிப் பாடுவோம்
இயேசு நல்லவர்
இதயம் திறந்து கூறுவோம்
இயேசு வல்லவர் -2
இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசு பெரியவர் இயேசு பரிசுத்தர்-3
1. சேதம் வந்திடாமல் சேர்த்தணைத்துக்
காத்த இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
எட்டா உயரம் எடுத்துச் சென்று
கன்மலை மேல் நிறுத்துவார்
திட்டம் செய்த எல்லாம்
நம்மைக் கொண்டு நிறைவேற்றுவார்
2. பாவம் சாபம் ரோகம் எல்லாம் நீக்கி மீட்ட
இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
எந்தன் பாதையெல்லாம் இயேசு
வெளிச்சம் தந்து நடத்துவார்
எந்தன் ஜீவ காலமெல்லாம்
எம்மை இயேசு கைவிடார்