karmel thay mariye – Carmel Thaai Mari

கார்மேல் தாய் மரியே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs and Roman Catholic Songs collection.

கார்மேல் தாய் மரியே – Carmel Thaai Mari
கார்மேல் தாய் மரியே
எம்மை காத்திடும் மாமரியே
உம்மை மன்றாடி வேண்டி நின்றோம்
அரவைப்பாய் அருள் புரிவாய்
கோவளத்தில் வீற்றிருக்கும் எங்கள் தாய் மரியே
கார்மேல் அன்னையே
அகிலம் போற்றும் உன்னையே
கோவளம் மண்ணிலே
அமர்ந்தாய் நிறைந்த அன்பிலே
ஆறுதல் தரும் அம்மா உந்தன் சந்நிதி
தாயின் தரிசனம் கிடைத்தால்
மனதில் நிம்மதி
நிறை அருள்வரம் பெறவே
திருத்தலம் நோக்கி நாங்கள் வேண்டி வந்தோம்
கார்மேல் அன்னையே
அகிலம் போற்றும் உன்னையே
கோவளம் மண்ணிலே
அமர்ந்தாய் நிறைந்த அன்பிலே
அம்மா உந்தன் கருணையை
உன் பிள்ளைகள் நாடி நின்றோம்
ஜெபமாலை அணிந்து கொண்டு
தவநெறிகளை நெஞ்சில் ஏற்றோம்
ஜெபங்கள் சொல்லி புகழ்ந்து
நடைப்பயணத்தை நாங்கள் தொடர்ந்தோம்
உன் திருமுகம் பார்த்த நொடியில்
மனசுமைகள் அனைத்தும் மறந்தோம்
வங்கக்கடலின் அரசியே
தினம் விடியலாய் வரும் தாயே
வாடிநின்ற மாந்தர்களின்
வாழ்வாக வந்த தாயே
இறைமகனை ஈன்றேடுத்த
கோவளம் கார்மேல் மாமரி தாயே
நிதம் காத்திடும் அன்னை நீயே
கார்மேல் அன்னையே
அகிலம் போற்றும் உன்னையே
கோவளம் மண்ணிலே
அமர்ந்தாய் நிறைந்த அன்பிலே
வரங்களை தரும் தாயே
வாழ்க்கைதுணை வரன் தருவாயே
குழந்தை இல்லை என்ற குறையை
போக்கும் கோவளம் அன்பு தாயே
தொழில்வளம் பெருகி உயர
நீ துணையாய் வருவாயே
குடும்பம் சிறக்க அமைதி பிறக்க
உனது கனிவை காட்டுவாயே
பொங்கும் அலை கடலோரம்
காட்சி தந்த தாயே
தங்கத்தேரில் பவனி வந்து
புதுமைகள் செய்வாயே
இறைஅருளே திருவுருவே
கோவளம் கார்மேல் மாமரி தாயே
நிதம் காத்திடும் அன்னை நீயே
கார்மேல் அன்னையே
அகிலம் போற்றும் உன்னையே
கோவளம் மண்ணிலே
அமர்ந்தாய் நிறைந்த அன்பிலே
ஆறுதல் தரும் அம்மா உந்தன் சந்நிதி
தாயின் தரிசனம் கிடைத்தால்
மனதில் நிம்மதி
நிறை அருள்வரம் பெறவே
திருத்தலம் நோக்கி நாங்கள் வேண்டி வந்தோம்
கார்மேல் அன்னையே
அகிலம் போற்றும் உன்னையே
கோவளம் மண்ணிலே
அமர்ந்தாய் நிறைந்த அன்பிலே