karray mukilay ezhunthu va – Kaattraai Mugilaai Eluntha Va

காற்றாய் முகிலாய் எழுந்து வா
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

காற்றாய் முகிலாய் எழுந்து வா – Kaattraai Mugilaai Eluntha Va
பாடல் வரிகள் – காணிக்கை பாடல்
காற்றாய் முகிலாய் எழுந்து வா
கருணை கடலை அமைந்த வா
பொன்னும் பொருளும் தந்தவா
உம் அன்பால் எம்மை அணைக்க வா
உமக்கே எம் இதய காணிக்கை
உமக்கே எம் வாழ்வின் காணிக்கை
1. பகிர்வு மனது நிறைவு தரும் பாச உணர்வு அமைதி தரும்
பலியில் உனது அருள் வரும் பணியில்
உனது துணை வரும் – 2
இதயம் மகிழ்ந்து உம்மில் கலந்து
எம்மை முழுதும் உமக்கே தருகின்றோம் – 2
2. வானும் புவியும் உன் அழகே நதியும் வளமும் உம் அருளே
இடியும் இசையும் உன் குரல் வியப்பை தருவதுன் செயல் – 2
இதயம் மகிழ்ந்து உம்மில் கலந்து
எம்மை முழுதும் உமக்கே தருகின்றோம் – 2