karthaave sollum um siththam

கர்த்தாவே சொல்லும் உம் சித்தம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தாவே சொல்லும் உம் சித்தம்
என்னில் என்றென்றும் ஆகட்டுமே
நீரே என் மேய்ப்பர் நீரே என் சத்தியம்
ஒரே கண்மலை கோட்டையும் நீர் (2)
உம் கிருபை எனக்கு போதுமே
உம் தயவால் என்னை தாங்குமே (2)
1. எத்தனை சோதனைகள் எதிர்கொண்டேன்
உம் தயவால் எத்தனை தோல்விகளை
வெற்றியாய் மாற்றினீரே
என்னையும் தூக்கி உம் தோளில் சுமந்து
என் சுமை தாங்கினீர் - இனி
கஷ்டங்கள் தோல்விகள் இல்லையே
சாபங்கள் தாழ்வுகள் இல்லையே
என்னில் இருப்பவர் நீர் இயேசுவே
2. பேரன்பு கொண்டவர் நீர்
பாவங்கள் தீர்ப்பவர் நீர்
உம் உயிர் தந்தவர் நீர்
என்னுயிர் காத்தவர் நீர்
எத்தனை முறைதான் உம் சொல்லை மீறி
அத்தனை தவறு செய்தேன்
ஆனாலும் நீர் என்னை நேசித்தீரே
மீண்டும் கனிவுடன் ஏற்றீரே
கண்மணிபோல் என்னை காத்தீரே