karthar mel enthan barathai

கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து கரங்களின்
கீழே அடங்கிடுவேன் கடினபாதையோ கஷ்ட
துக்கமோ கரம் பிடித்தென்றும்நடந்திடுவேன்
1. என் நினைவுகள் எல்லாம் உம் நினைவுகள் அல்ல
உம் வசனங்களெல்லாம் வெறுமையாய் திரும்பவில்லை -2
நிர்மூலமாகாதது நின் கிருபையினால் அல்லோ (2)
2. கடலை உலர்ந்த தரையாக மாற்ற வல்லோன்
காலை தள்ளாட வொட்டா காக்கிறவர் உறங்கார்
வலது பக்கத்தில் அவர் நிழலாயிருக்கின்றாரே
3. எனக்காக யாவற்றையும் செய்து முடிப்பவரே - என் யுத்தங்கள் யாவும் நடப்பிக்கும் கர்த்தரே
உம்மையல்லாமல் என்னால் ஒன்றும் முடியாதென்றேன்