karthar nallavar karthar nallavar

கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர்
அவர் கிருபை என்றென்றும் உள்ளதே
கிருபையை கொண்டாடுகின்றேன்
கிருபையால் நிலை நிற்கின்றேன்
கிருபையை தினம் காண்கின்றேன்
கிருபையால் என்றும் வாழ்கின்றேன்
1. எனது கண்முன் உம்மை வைத்தேன்
விழுந்திடாமல் பாதுகாத்தீர்
இரவோடு பகலோ இராக்காலமோ
முன்குறித்ததை நிறைவேற்றுவீர்
2. நீடித்த நாட்களாய் திருப்தியாக்கி
குறைகள் இல்லாமல் காத்துக் கொண்டீர்
நன்மைகள் கிருபைகள் தொடர செய்து
எனது வாழ்வை மகிழச் செய்தீர்
3. உண்மையுள்ளவன் என்று நம்பி
உன்னத அழைப்பை எனக்குத் தந்தீர்
உமது கிருபைகள் எனக்குத் தந்து
உண்மையாய் ஓடிட உதவி செய்தீர்