karthar nallavarae

கர்த்தர் நல்லவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தர் நல்லவரே
எல்லா சூழ்நிலைகளிலும் நல்லவரே
கர்த்தர் வல்லவரே
எல்லா சூழ்நிலைகளிலும் வல்லவரே
காற்றின் மத்தியிலும் கர்த்தர் நல்லவர்
புயலின் மத்தியிலும் கர்த்தர் வல்லவர்
1. சிறுமையில் இருந்தேன்
என்னை தூக்கி எடுத்தார்
எளியவன் என்னை
உயரத்தில் வைத்தார்
வார்த்தைக்குள் மறைவான
வாழ்க்கையை செழிப்பாக்கி
உன்னதத்தில் உயர்த்தி வைத்தார்
2. இன்பம் தரும்
உம் வார்த்தையினால்
என் துன்பமெல்லாம்
பறந்திட செய்தீர்
ஆத்துமாவை தினம் உயிர்ப்பிக்கும் தேவன் நீர்
தளராமல் தாங்குபவர்