Kartharai Naan Ekkalathilumae Karuthudan Sthotharipen

கர்த்தரை நான் எக்காலத்திலுமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தரை நான் எக்காலத்திலுமே
கருத்துடன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் கண்ணின் மணி போல் காத்ததினாலே
கருத்துடன் ஸ்தோத்தரிப்பேன் -2 கர்த்தரை
1.ஆண்டவர்க்குள் என் ஆன்மா மகிழும்
ஆதலால் கலக்கம் இல்லை -2
அவர் ஆபத்து காலத்தில் விடுவித்து காத்து
ஆயுளை நீட்டுகிறார்
என்னோடு கூட கர்த்தர் மகிமையை
எல்லோரும் உயர்த்திடுங்கள்
அவர் எல்லா பயத்துக்கும் நீங்கலாகினர்
என் விண்ணப்பம் கேட்டார் -2 கர்த்தரை
2.இவ்வேழை கூப்பிட்டான் கர்த்தர் கேட்டு
இரக்கமாய் செவி சாய்த்தார் -2
அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாகினர் (நீங்கலாக்கியே)
இரட்சிப்பை அருளிசெய்தார்
சிங்க குட்டிகள் தாழ்ச்சியடைந்து
பட்டினியாயிருக்கும்
ஆனால் சிறப்பாய் கர்த்தரை தேடுவோர்க்கென்றும் (தேடுவோர்க்கோ)
ஒரு நன்மையையும் குறையாது -2 கர்த்தரை