kartharaiye nambiduvai

கர்த்தரையே நம்பிடுவாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தரையே நம்பிடுவாய்
அவரே எந்தன் துணையாவார்
கன்மலையாம் மீட்பரவர் கைவிடா நேசரவர்
நம்பிடுவேன் இயேசுவையே
என்றென்றும் நம்பிடுவேன் -2
1. ஜீவன் சுகங்கள் தந்தருள்வார்
ஜீவிய பாதையிலே
சேனைகளின் கர்த்தர் இதோ
ஜெயமீந்து உன்னையும் காப்பார்
2. சஞ்சலங்கள் மத்தியிலே
தஞ்சம் அளிப்பாரே
அஞ்சிடாதே நம்பிடு வா
பின்னும் உன் வேண்டுதல் கேட்பார்