Kartharilum Tham Vallamiyilum

கர்த்தரிலும் தம் வல்லமையிலும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1. கர்த்தரிலும் தம் வல்லமையிலும்
கிருபையாய் யாவரும் பலப்படுவோம்
தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று
திராணியுடன் போர் புரிவோம்
பல்லவி
சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக் கொள்வோம்
சாத்தானின் சேனை முறித்திடுவோம் – அவர்
சத்துவ வல்லமையால்
2. மாமிசம், இரத்தத்துடனுமல்ல
துரைத்தனம் அதிகாரம் அந்தகாரத்தின்
லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும்
போராட்டம் நமக்கு உண்டு – சர்வாயுத
3. சத்தியமாம் கச்சையைக் கட்டியே
நீதியின் மார்கவசம் தரித்தே
சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை
நாம் கால்களில் தொடுத்துக் கொள்வோம் – சர்வாயுத
4. பொல்லாங்கன் எய்யும் அம்புகளை
வல்லமையோ டெதிர்க்கும் ஆயுதம்
விசுவாசமென்னும் கேடகம் மேலே
வீரமுடன் பிடித்து நிற்போம்-சர்வாயுத
5. இரட்சண்யமாம் தலை சீராவும்
எச்சணமும் அணிந்து கொள்வோம்
தேவ வசனமென்னும் ஆவியின் பட்டயம்
தேவை அதைப் பிடித்துக் கொள்வோம் – சர்வாயுத
6. எந்த சமயத்திலும் சகல
வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்
பரிசுத்தர்கட்காகவே ஆவியினால்
மன உறுதியுடன் ஜெபிப்போம் – சர்வாயுத
கர்த்தரிலும் தம் வல்லமையிலும் பாடல் வரிகள், Kartharilum Tham Vallamiyilum lyrics