Kartharin Kirubai Kaalaithorum song lyrics

கர்த்தரின் கிருபை காலைதோறும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தரின் கிருபை
காலைதோறும் புதிதானது
நான் நிர்மூலமாகாமல்
இருப்பது தேவ கிருபை
நான் நிற்பதும் நடப்பதும்
தேவ கிருபை (புலம்பல் 3:22)
தேவ பயமுள்ளோர் மேலே
இருப்பது தேவ கிருபை
என்றும் அற்புதம் செய்திடும்
தேவ கிருபை (சங்கீதம் 103:17)
எங்கள் மீறுதல் எல்லாம்
மன்னிக்கும் தேவ கிருபை
தேவ சித்தத்தில் நடத்திடும்
தேவ கிருபை (மீகா 7:18)
நம்மை இரட்சித்து வழி
நடத்தும் தேவ கிருபை
தேவ அபிஷேகம் தந்திடும்
தேவ கிருபை (தீத்து 3:5)
என்னை இயேசுவைப் போலே
மாற்றிடும் தேவ கிருபை
எனக்கு ஜெயத்தின் மேல் ஜெயம்
தரும் தேவ கிருபை