Kartharin Thiruvirundhu Bakthiyodu song lyrics

கர்த்தரின் திருவிருந்து பக்தியோடதையருந்து

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Holy Communion Song Thiruvirundhu Paadalagal
கர்த்தரின் திருவிருந்து
பக்தியோடதையருந்து – ஆயத்தத்
தோடின்று அதில் சேர்வதே நன்று
சுத்த நல் மனச்சாட்சி
இரத்தத்தால் தெளிக்கப்பட்ட
உத்தம இருதயம் மெத்தவும் அவசியம்
தன்னைத்தான் சோதித்து
தன்னையே நிதானித்து – இன்று நீர்
பங்கு பெறில் அன்று நியாயம் தீர்க்கப்படீர்
பொல்லாப்பு துர்க்குணம்
இல்லாமலகற்றுவீர் – துப்புரவு
உண்மையுடன் இப்போதாசரித்திடுவீர்
அப்பம் என் சரீரமே
இப்பாத்திரம் என் இரத்தமே – தப்பாது
பங்கெடுப்பீர் என்றேசு மொழிந்தனரே
மெய்யாய் நம் நோய்களை
மெய்தனில் சுமந்த அப்பம் – வாங்கி நீர்
புசித்து நீங்குவீர் வியாதியினின்றும்
ஜீவனின் இரத்தத்தால்
பாவமன்னிப் புண்டாம் – சுத்தமும்
ஜீவன் பெற இரத்தத்தை பானம் செய்வீர்
நமது பஸ்கா இயேசு கிறிஸ்து
நமக்காக அடிக்கப்பட்டார் – அதை நினைவு
கூரும்படி இதை செய்வீரவர் வருமளவும்