kartharukku kaanikai seluththu

கர்த்தருக்கு காணிக்கை செலுத்திடுவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தருக்கு காணிக்கை செலுத்திடுவேன்
களிகூர்ந்து மகிழ்ந்து என் பலன் பங்கினை
பரலோக தேவனுக்கு செலுத்திடுவேன்
1. உண்மையை காத்திடும் உயர்ந்த தேவன்
நன்மையை இன்று வரை அனுப்பி தந்தார்
நன்றியால் என் உள்ளம் கவி பாடிட
கர்த்தருக்குக் காணிக்கை செலுத்திடுவேன்
சுகம் பெலன் கொடுத்திடும் மகிமை தேவன்
கைவிடாது இன்று வரை நடத்தி வந்தார்
ஸ்தோத்திரம் பாடி துதி செலுத்தி
கர்த்தருக்குக் காணிக்கை செலுத்திடுவேன்
3. ஞானம் கிருபை நல்கிடும் நல்ல தேவன்
தேவையை இன்று வரை கொடுத்து வந்தார்
ஆவியால் நிறைந்து ஆர்ப்பரித்து நான்
கர்த்தருக்குக் காணிக்கை செலுத்திடுவேன்
4. வாழ்வு வளம் இன்னும் தந்திடும் தேவன்
இயேசு வரும்வரை காத்திடுவார்
இன்றும் என்றென்றும் மறவாமலே நான்
கர்த்தருக்குக் காணிக்கை செலுத்திடுவேன்