karththar iyesuve veettaikkatti mutikka

கர்த்தர் இயேசுவே வீட்டை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தர் இயேசுவே வீட்டைக்கட்டி முடிக்க
உதவி செய்தீரே ஸ்தோத்திரமே
நல்ல இயேசுவே இந்த வீட்டிலே
தங்கி என்றும் நிலைத்திடுமே
இதை உந்தனின் ஆலயமாய்
பரிசுத்தப்படுத்திடுமே
எல்லா நாளிலுமே உந்தன் ஆசீர்வாதம்
என்றென்றுமாய் தங்கட்டுமே
உம் அடியானின் வீடு உமக்கு முன்பாக
என்றென்றும் இருக்கும்படி
இதை ஆசீர்வதித்திடுமே
உந்தனின் கிருபையினால்
பரதேசியாக தங்கும் வீட்டிலே
உந்தன் பிரமாணங்கள் கீதமே
உந்தன் பரிசுத்த தூதர்களை
காவலாய் வைத்திடுமே