karththar nallavar avar rompa nallavar

கர்த்தர் நல்லவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தர் நல்லவர் அவர் ரொம்ப நல்லவர்
இதுவரை நடத்தினார் இனிமேலும் நடத்துவார்
அவர் கிருபை என்றுமுள்ளதே
கிருபை என்றுமுள்ளதே
தாங்கி நடத்திடும் அன்பிதே
என்றும் மாறாததே
1.மாற்றங்கள் இல்லா வாழ்க்கையில்
மாற்றம் கொண்டு வருபவர்
முடிந்து போனது என்பதில் சரிதம் எழுத வைப்பவர்
மலைகள் விலகினாலும் நீர் விலகிடவே மாட்டீர்
வாக்குகள் கைகளிலே நீர் மறந்திடவே மாட்டீர்
2.மரணப்பள்ளத்தாக்கிலே மீண்டும் ஜீவனை தந்தவர்
சத்துருக்கள் கண் காணவே பந்தியில் அமர வைத்தவர்
நன்மையும் கிருபையுமே என்னை தொடர்ந்திடுமே
அபிஷேக தைலத்தினால் பாத்திரம் நிறம்பி வழிந்திடுதே