karththar nallavar enpathai

கர்த்தர் நல்லவர் என்பதை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தர் நல்லவர் என்பதை
நான் ருசித்துப்பார்கிறேன்
கர்த்தர் வல்லவர் என்பதை
அவர் செயலில் காண்கிறேன்-2
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை என்றும் உள்ளது -2
1.கர்த்தர் என் பட்சத்தில் இருப்பதால்
கலக்கம் இல்லையே
அவர் வார்த்தை எனக்குள் இருப்பதால் பயமும் இல்லையே
என்னை பண்படுத்துவார்
என்னை விளைய பண்ணுவார்
என்னை பலுக பண்ணுவார்
என்னை பெருக பண்ணுவார்-2
2.கர்த்தர் என் மேய்ப்பராய் இருப்பதால்
தாழ்ச்சி இல்லையே
அவர் வார்த்தை எனக்குள் இருப்பதால்
வறட்சி இல்லையே
என்னை பண்படுத்துவார்
என்னை விளைய பண்ணுவார்
என்னை பலுக பண்ணுவார்
என்னை பெருக பண்ணுவார்-2
கர்த்தர் நல்லவர் என்பதை பாடல் வரிகள், Karthar Nallavar Yenbathai Lyrics