karththar oru kariyam seyvar

கர்த்தர் ஒரு காரியம் செய்வார்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

கர்த்தர் ஒரு காரியம் செய்வார்
கலங்கிடவே மாட்டேன்
கடந்தவைகள் நடப்பவைகள் நன்மையாகவே இருக்கும்
1.இதுவரை நடக்காத காரியம்
என் தேவன் எனக்காய் செய்வார்
நினைவிலும் கனவிலும் தோன்றிடாத புதிய காரியம் செய்வார்
2.குறைவுகள் நிறைவாக்கும் தேவன்
பெருகவே பெருகச்செய்வார்
விவரித்துச்சொல்லிட முடியாத பெரிய காரியம் செய்வார்
3.தேவன் தந்த தரிசனம்
ஒருவரும் அழிக்கவே முடியாது
உடன்படிக்கை செய்து அழைத்த தேவன் பயங்கர காரியம் செய்வார்