Karththar Yesuvil

கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம் – Karthar Yesuvil Vearoontruvom
கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்
கன்மலை மீதே கட்டப்படுவோம்
விசுவாசத்தில் உறுதி கொள்வோம்
நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம்
பாவமில்லாதொரு வாழ்க்கையும்
மாயமில்லா மனத்தாழ்மையும் -2
சாந்தம் நீடிய பொறுமையும் 2
இரக்கம் தயவை தரித்திட
வேத வசனத்தால் நிறையவும்
தேவ சமாதானம் ஆளவும்
பேதங்களின்றி வாழவும்
பேரன்பில் வளர்ந்து பெருகிட
திரு வசனம் எங்கும் கூறவும்
திறப்பின் வாசலில் நிற்கவும்
இயேசுவின் நுகத்தை ஏற்கவும்
வருகையில் மகிமை அடைந்திட