karththarin patsaththil nirpavan yar – Kartharin patchaththil Nirpavan yaar

கர்த்தரின் பட்சத்தில் நிற்பவன் யார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தரின் பட்சத்தில் நிற்பவன் யார் – Kartharin patchaththil Nirpavan yaar
கர்த்தரின் பட்சத்தில் நிற்பவன் யார் – பக்தி
வைராக்கியம் காட்டுவோம் எழுந்து வா
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே தினம் ஆராதிப்போம் -2
எலியாவைப் போல கர்த்தரே தேவன் என்று
உலகெங்கும் நிரூபிக்க வா
சாபங்களை நீக்கிட்ட பினேகாசை போல
துணிவுடன் எழுந்து வா
கிதியோனைப் போல எதிரியை வீழ்த்திட
இருக்கின்ற பெலத்தோடு வா
மோசேயைப் போல விசுவாச வீரனாய்
வாழ்ந்து நிரூபிக்க வா
பவுலைப் போல துணிவுடன் எழுந்து
இறைவாக்கு அறிவிக்க வா
கிறிஸ்து என் ஜீவன் சாவு என் ஆதாயம்
வாழ்ந்திட எழுந்து வா