karththarukkaka kaththirunthen

கர்த்தருக்காக காத்திருந்தேன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தருக்காக காத்திருந்தேன்
என்னிடம் சாய்ந்து பதிலளித்தார்
நான் சிறுமையும், எளிமையுமானவன்
என்மீது நினைவானீரே
நீர் துணையும் அரணுமானவர்
விடுவித்துக் காத்திடுமே.
ஏசைய்யா – 2
உம்மையே பாடுவேன்
உம்மையே நம்புவேன்
1) உம்மை தேடுகின்ற நான் மகிழ்ந்து
சந்தோஷமாய் பாடுவேன்
உமது இரட்சிப்பை விரும்பி எந்நாளும்
சொல்லி மகிழ்வேன்- ஏசைய்யா -2
2) பலவித தீவினைகள் என்னை சுற்றி சூழ்ந்திடுதே
(நான்) நிமிர்ந்து பார்க்கக்கூடாமல்
இருதயம் சோர்ந்திடுதே- ஏசைய்யா -2
3) குழியிலும், உளையான சேற்றினிலும்
கை தூக்கி எடுத்தீரே
என் கால்கள் மலைமேல் நிறுத்தி
(என் அடிகளை) உறுதி உறுதிபடுத்தினீரே– ஏசைய்யா -2