karththave nan ummai nampiththan

கர்த்தாவே நான் உம்மை நம்பித்தான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தாவே நான் உம்மை நம்பித்தான்
ஒவ்வொரு செயல் செய்கிறேன்
கர்த்தாவே நான் உம்மை நம்பித்தான்
ஒவ்வொரு செயல் செய்கிறேன்
இப்பூவினில் உமையன்றியே
துணை யாருமே கிடையாதையா
ஆதரவு நீர்தான் ஐயா எனக்கு
ஆதரவு நீர்தான் ஐயா
கர்த்தாவே நான் உம்மை நம்பித்தான்
ஒவ்வொரு செயல் செய்கிறேன்
1.ஐ-இரு மாதம் கருவினில் எனக்கு
உணவூட்டிய கரம் அல்லவா
பெற்றோரும் உற்றோரும் உதறிய பின்னும்
உறுதுணையாய் நின்றீர் ஐயா
அனாதையாய் நானும் அலைந்திட்ட போதும்
ஆதரவு இன்றி தவித்திட்ட போதும்
அனாதையாய் நானும் அலைந்திட்ட போதும்
ஆதரவு இன்றி தவித்திட்ட போதும்
தேவா நீர் தான் நிழல் கொடுத்தீர்
என் வாழ்வை புதிதாய் அலங்கரித்தீர்
2.பரியாசம் செய்து நகைத்தவர் முன்னே
பரிவோடு அனைத்தீர் ஐயா
வீண் பழி என் மேல் சுமத்திய பொழுதும்
வீழாமல் காத்திரையா
குப்பையாய் என்னை நினைப்பவர் முன்பு
உயரத்தில் உயர்த்தி அழகு பார்கின்றீர்
குப்பையாய் என்னை நினைப்பவர் முன்பு
உயரத்தில் உயர்த்தி அழகு பார்கின்றீர்
தேவா நீர் தான் இருக்கையிலே
இந்த மனிதர் எனக்கு என்ன செய்வான்
கர்த்தாவே நான் உம்மை நம்பித்தான் பாடல் வரிகள், Karthavea Naan Ummai Nambithaan Lyrics