1.karththave, poothalaththile

கர்த்தாவே பூதலத்திலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.கர்த்தாவே, பூதலத்திலே
உண்டான கேட்டைப் பாருமேன்
எத்தேசமும் இருளிலே
இருந்து நீங்கச் செய்யுமேன்.
2.நீரே மெய்த் தேவன்; மாந்தர்கள்
வீணான மார்க்கமாகவே
பொன், வெள்ளி, மண், கல் வீரர்கள்
தேவர்கள் என்கிறார்களே.
3.வல்லவரான க்றிஸ்துவே,
அப்பொய்களை அகற்றுமேன்;
தெய்வீக வார்த்தையால் நீரே
துன்மார்க்கத்தை அதட்டுமே.
4.எல்லாரும் ஏக சித்தமாய்
மெய்த்தேவனான உம்மையே
அறிந்து உம்மேல் நேசமாய்
இருக்கச் செய்யும் கர்த்தரே.