karuvil uruvana nal muthal

கருவில் உருவான நாள் முதல்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கருவில் உருவான நாள் முதல்
என்னை கருத்தோடு காத்த தெய்வமே
கருவில் உருவான நாள் முதல்
கண் மணி போல காத்த தெய்வமே
ஆராதனை துதி உமக்கே ஆயுளெல்லாம் ஆராதனை
ஆராதனை துதி உமக்கே ஆராதனை
ஆராதனை துதி உமக்கே ஆராதனை
1.தனிமையான நேரங்களில் ஒரு
தாய் போல தேற்றி வந்தீர்
கண்ணீரின் பாதைகளில் ஒரு
தந்தை போல சுமந்து வந்தீர்
பெலனில்லா நேரங்களில்
புது பெலன் தந்தென்னை தங்கினீரே
2.தலை குனிந்த இடங்களிலே என்
தலையை நீர் நிமிர செய்தீர்
வெட்க பட்ட இடங்களிலே
கண் மலை மேலே உயர்த்தி வைத்தீர்
ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்து மகிழுகிறீர்
3.பாவியாய் வாழ்ந்த என்னை உம்
இரத்தத்தால் மீட்டு கொண்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னை உம்
இறக்கத்தால் சேர்த்து கொண்டீர்
நீர் வருகிட்ட நாட்களிலே
உம்மோடு நானும் பறந்து செல்வேன்