karuvila ennai therinthu

கருவிலே என்னை தெரிந்து

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கருவிலேன்னை தெரிந்து கொண்டீரே
என் உருவமதில் அன்பு வைத்தீரே
தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்னே
என்னை பேர் சொல்லி அழைத்தீரே
தெய்வமே இயேசுவே
நீங்கதான் எனக்காறுதல்
பாபிலோனின் தீய ஆவி வேண்டாம்
பரிசுத்த ஆவி எனக்கு தாருமே
அடிமைத்தன ஆவி எனக்குள் வேண்டாம்
அன்பின் ஆவி எனக்கு தாருமே
சுயநலத்தின் ஆவி எனக்குள் வேண்டாம்
பிறர் நலத்தின் ஆவி தாருமே
பெருமையின் ஆவி எனக்குள் வேண்டாம்
தாழ்மையின் ஆவி தாருமே
ஜீவனத்தின் பெருமை எனக்குள் வேண்டாம்
இருப்பதில் நிம்மதி தாருமே
ஆபாச எண்ணங்கள் வேண்டாம்
உம்மில் அடங்கி போகும் ஆவி தாருமே