kasappellam neekkip pootum kalvari anpe

கசப்பெல்லாம் நீக்கிப் போடும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கசப்பெல்லாம் நீக்கிப் போடும் கல்வாரி அன்பே
கண்ணீரோடு கேட்கிறேன் என் உள்ளத்தில் வாரும்
1. எல்லோரையும் மன்னிக்க கிருபை தாரும்
மறந்து விட்டு மகிமையால் உம்மை சேவிக்க
கடின இருதயம் எனக்கு வேண்டாம்
சாந்தமுள்ள ஆவியை எனக்கு தந்திடும்
2. அக்கினியாய் இறங்கி வந்து அழித்து போடும்
மண்ணையும் நக்கி போட்டு சுத்தமாகிடும்
மண்ணின் சுபாவங்கள் என்னிடம் உண்டு
இயேசுவின் சிந்தையால் என்னை நிரப்பும்
3. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்றீர்
பாவி என்னை நினைத்து உள்ளத்தில் வாரும்
பரம தரிசனம் பெற்று கொள்ள
அசுத்தங்கள் யாவையும் அழித்து போடும்
4. என் ஜனங்கள் அறிவில்லாமல் அழிகின்றாரே
உம் ஆவியை ஊற்றி நீர் மீட்டு கொள்ளும்
காத்திருக்கிறோம் எழுப்புதல் அனுப்பும்
உம் வருகைக்காக எங்களை ஆயத்தமாகும்
கசப்பெல்லாம் நீக்கிப் போடும் பாடல் வரிகள்,Kasappellaam neekippodum Kalvari Anbe Lyrics