kaththirukkum umakkaka – Kaathirukkum Umakkaga

காத்திருக்கும் உமக்காக

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காத்திருக்கும் உமக்காக – Kaathirukkum Umakkaga
காத்திருக்கும் உமக்காக
என் மனமே ஆவலாக
இமைகளும் மூடாமல்
சிறிதளவும் சலிக்காமல்-2
உமது விருப்பம் செய்வதே
நான் தரும் கனமே
அதற்கு உகந்த பரிசு
நீர் தரும் புண்ணிய கனமே-2
எனது மணவாளன் நீர்
எனக்காக வந்திடுவீர்
ஒவ்வொரு கண்ணீருக்கும்
அந்நாளில் பலன் கிடைக்கும்-2
இதயத்தை மயக்கிடும்
உலகத்தின் இன்பங்கள்
நீர் தரும் ஈவுக்கு
இணையில்லையே
ஆசைகள் தூண்டிடும்
பாராட்டு மேடைகள்
என் பெயர் நீர் சொல்லும்
நிலை போல் இல்லையே
தியாகங்கள் செய்தாலும்
உண்டு வெகுமதியே
உமக்காக எந்நாளும்
எரியும் என் தீயே
உம் நாமம் வேண்டும்படி
நான் உந்தன் மணவாட்டி
கறை இல்லையே என் இயேசுவே
போதும் போதும் நம் உறவே-எனது மணவாளன்