katrrukkum kadalukkum

காற்றுக்கும் கடலுக்கும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காற்றுக்கும் கடலுக்கும்
கட்டளையிடுகின்ற இவர் யார் – 3
கடலின் மேலே நடந்து
வருகின்ற இவர் யார் – 3
மலைகளின் மேலே குதித்து
வருகின்ற இவர் யார் – 3
புள்ளி மானைப் போலே
துள்ளி வருகின்ற இவர் யார்
அவர் தான் இயேசு அவரிடம் பேசு
அவர் தான் இயேசு அவரிடம் பேசு – 2
1. அவர் நாமம் சொன்னால்
நோகளும் ஓடுதே இவர் யார்
அவர் பேரைச் சொன்னால்
பேய்களும் நடுங்குதே இவர் யார்
அவர் இரத்தம் சொன்னால்
சத்துரு நடுங்குவான் இவர் யார்
அவர் உத்திரவிட தேவ சித்தம்
நடக்குதே இவர் யார்
2. அவர் பேசத் தொடங்கினால்
நேசம் வடியுதே இவர் யார்
என் நேச மணாளன்
பாச குணாளன் இவர் யார்
வனாந்தர பாதையில்
நேசகுமாரன் இவர் யார்
என் இதய சித்திரம்
முத்திரை மோதிரம் இவர் யார்
3. என் அரணும் கோட்டையும்
பெலனும் துருகமே இவர் யார்
என் உறவே உண்மை
தெய்வமே இவர் யார்
மரித்து உயிர்த்து மரணத்தை
ஜெயித்த இவர் யார்
என்னை மறுரூபமாக்கி
மகிமையில் சேர்க்கும் இவர் யார்