kattina veedu pala irunthum

கட்டின வீடு பல இருந்தும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கட்டின வீடு பல இருந்தும்
கடவுளுக்கு இடமில்லை
மாட்டுத்தொழுவில் பிறந்தாரையா – இயேசு
முன்னனையில் உதித்தாரையா – இயேசு
ஏழைகளைத் தேடிவந்த இயேசு
என்று சொல்லிப்பாடி மகிழ்வோமையா
மச்சிவீடு பல இருந்தும்
மன்னவனுக்கு இடமில்லை
தச்சன் வீட்டில் பிறந்தாரையா – இயேசு
மோட்ச ராஜன் உதித்தாரையா
விலைமதியா வஸ்திரங்கள்
விதவிதமாய் குவிந்திருந்தும்
கந்தலாடை அணிந்தாரையா இது
விந்தையான மகிமை ஐயா
பஞ்சனைகள் பல இருந்தும்
பிஞ்சுக் குழந்தைக்கிடமில்லை
நெஞ்சணையில் தவழ்ந்தாரையா – மரியின்
தஞ்சத்திலே மகிழ்ந்தாரையா