kattukkullae kichili maram

காட்டுக்குள்ளே கிச்சிலிமரம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காட்டுக்குள்ளே கிச்சிலி மரம்
போன்றவரே ஆராதனை – என் மேல்
விழுந்த கொடி நேசமே ஆராதனை
பிரியமே ஆராதனை நேசரே ஆராதனை
1. என் நேசரின் கண்கள் புறா கண்கள்
என் நேசரின் கரங்கள்
என்னை அணைத்துக் கொள்ளும்-அவர்
இன்பமானவர் என் உள்ளத்தில் வந்தவர்
அவர் ஜீவனுள்ளவர் என்னுயிரில் கலந்தவர்
2. என் நேசரின் வஸ்திரம் வாசனை வீசும்
என் நேசரின் முகமோ பிரகாசிக்கும் – அவர்
என்னைப் பார்த்தால் நான் பிரகாசிப்பேன்
அவர் என்னை தொட்டால் நான் சுகமாவேன்
3. என் நேசரின் பாதங்கள் அழகுள்ளது
என் நேசரின் நடையோ என்னை கவர்ந்தது
அவர் என்னுடையவர் நான் அவருடையவன்
என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்