kavalai ennil perukum

கவலை என்னில் பெருகும் போதெல்லாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கவலை என்னில் பெருகும் போதெல்லாம்
கண்ணீரோடு உம்மையே
நோக்கிப் பார்க்கிறேன் (2)
என் உறவினார்கள் மறந்தாலும்
நண்பர்கள் வெறுத்தாலும்
நீர் மாத்ரம் போதுமையா
1. வேலைக்காரரின் கண்கள் தனது
எஜமான் கைகளை நோக்குமாப் போல
எந்தன் தேவனே என் கண்கள் தான்
உம்மையே நோக்குகின்றதே
2. நீரைத்தேடும் மான்கள் போலவே
நித்தமும் உம்மை காணத்துடிக்கிறேன்
என் தாகத்தை தீர்க்கும் தேவன் நீர்
திருப்தியாக்கி மகிழவைப்பீர்
3. வழிதப்பிப்போன ஆட்டைப்போலவே
உமது உறவை இழந்து தவிக்கிறேன்
உந்தன் பாதத்தில் சரணடைகிறேன்
மேல்கரத்தை நீட்டி அணைத்துக்கொள்ளும்