Kavalaipadade Magane

கவலைப்படாதே மகனே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கவலைப்படாதே மகனே கவலைப்படாதே
கவலைப்படாதே மகளே கவலைப்படாதே (2)
உன்னை என்றும் விசாரிக்கும் பரமபிதா
உன் அருகே இருக்கிறார் கலங்காதே (2)
உன்னையும் நேசிக்கும் தகப்பனவர்
உன் குறை எல்லாம் நீக்கீடுவார் (2) – கவலைப்படாதே
காக்கைகளை போஷிக்கும் தேவனவர்
அனுதினமும் நடத்துவார் கலங்காதே (2)
பூக்களை உடுத்திடும் ராஜனவர்
கண்மணி போல் உன்னை காத்திடுவார் (2) – கவலைப்படாதே
துயரமெல்லாம் புரிந்திடும் தெய்வமவர்
உன் பாரம் சிலுவையில் சுமந்தாரே (2)
கவலைகள் அவரிடம் சொல்லி விடு
கண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவார் (2) -கவலைப்படாதே