kavalyil vaazhum en magane

கவலையில் வாழும் என் மகனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கவலையில் வாழும் என் மகனே
கலங்கியே தவிக்கும் என மகளே
கவலையும் கலக்குமும் கொடுத்துவிடு
கடவுளே உன்னை நடத்திடுவார் உன் -2
கலங்காதே மகனே கலங்காதே மகளே
1. ஆழ்கடல் மூச்சினை அழுத்தினாலும்
கடற்பாசி வாழ்க்கையை சுற்றினாலும் -2
யோனாவின் தேவன் கரை சேர்ப்பார்
நற்செய்தி அறிவிக்க மீட்டுக் கொள்வார் -2
2. வெறுப்பும் பகைமையும் பொறாமைகளால்
நன்மைக்காய் சிறையிலே தள்ளப்பட்டாயோ
யோசேப்பின் இறைவன் உயர்த்திடுவார்
உன் வழி அவர்களை போஷிப்பார்
3. குடும்பமும் உடைமையும் உடலினையும்
சாத்தான் கை வைத்து அழித்தாலும்
யோபுவின் இறைவன் உனக்குண்டு
இரு மடங்காசீரை அளித்திடுவார்
4. செங்கடல் யோர்தான் முன்னே வந்தாலும்
எரிகோ கோட்டை சுற்றி நின்றாலும்
மோசேயின் தேவன் இன்றும் உண்டு
தடைகளை மாற்றி வழி திறப்பார்