keerthanaiyil aarathanai
கீர்த்தனையில் ஆராதனை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வந்தனம், வந்தனமே
தேவ துந்துமி கொண்டிடுமே! – இது
வரையில் எமையே வளமாய் காத்த எம் துரையே
மிகத் தந்தனமே.
மாறாப் பூரணனே,
எல்லா வருடங்களிலும் எத்தனை
உன்றன் வாக்குத் தவறாத அருளைப் பொழிந்திட்ட
வல்லவிக்குத் துதியே. (2)
சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே,
எங்கள் சாமி, பணிவாய் நாமே துதி புகழ்
தந்தனமே நிதமே! (2)
வந்தனம், வந்தனமே!
சிறுவந்தொட்டுனை யாரு
செல்லப் பிள்ளைபோல் காத்து (2)
உரிமைத் தந்தை என்றென்றும்
உயிரோடு இருப்பார் உன்னை.
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதா இருக்க
உனக்கென்ன குறை மகனே.
திரியேக பரதேவா, நெறி மேவும் ஒரே யோவா
சித்தம் இரங்கிக் காத்து, கிறிஸ்தின் முகத்தைப் பார்த்து
தேவரீர் கேட்காத தீவினைகளைச் செய்தும்
தண்டியாமல் பொறுத்தீர் – நீர்
யாவும் அறிந்திருந்தும்
கோபித்து கைவிடாத என் நன்றி
கேட்டை மறுத்தீர்
ஜீவனே, உமக்குப் பாவி – பதில் என்ன செய்வேன்? (2)
மேவி அடி தொழாமல் ஆவி எங்ஙனம் உய்வேன்
சருவேசுரா, ஏழைப் பாவி – என் பேரிலே,
தயவாய் இரும் சுவாமி. (2)
2. Oru Pothum Maravatha
3. Saruvesura Yelaipaavi
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதா இருக்க
2. Oru Pothum Maravatha
சருவேசுரா, ஏழைப் பாவி – என் பேரிலே,
3. Saruvesura Yelaipaavi