Keezh Kaatru Lyrics

கீழ்க்காற்று

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கீழ்க்காற்று தேசத்தில் வீசும் நேரமே
ஆத்துமாக்கள் கோடிகளாய் பெருகும் காலமே -2
எழுப்புதல் காலம் ஆயத்தமாவோம்
தேசமெங்கிலும் சுவிசேஷம் சொல்லுவோம் -2
இயேசுவின் இரத்தத்தினால்
தேசம் தூய்மையாகட்டும் -2
அறுவடையின் வாரங்களை அனுமதிக்கும் தேவன்,
ஆத்துமாக்கள் களஞ்சியத்தில் சேர்த்திடும் நல் காலம் -2
இமயம் முதல் குமரி வரை இயேசு நாமமே
மன்னன் இயேசு ஆட்சி செய்யும் காலம் சமீபமே -2
இயேசுவின் இரத்தத்தினால்
தேசம் தூய்மையாகட்டும் -2
கீழ்க்காற்று தேசத்தில் வீசும் நேரமே
ஆத்துமாக்கள் கோடிகளாய் பெருகும் காலமே -2
எழுப்புதலை தேவன் தந்தால் சபைகள் தாங்குமா ?
திரள் திரளாய் ஆஸ்திகளை சேர்க்கும் காலமா ? – 2
தேவை உள்ள கிராமங்களை தேடிச் செல்லவும்
தோள் கொடுத்து தேசத்தை தூக்கி நிறுத்துவோம் -2
இயேசுவின் இரத்தத்தினால்
தேசம் தூய்மையாகட்டும் -2
எழுப்புதல் காலம் ஆயத்தமாவோம்
தேசமெங்கிலும் சுவிசேஷம் சொல்லுவோம் -2
இயேசுவின் இரத்தத்தினால்
தேசம் தூய்மையாகட்டும் -2
கீழ்க்காற்று தேசத்தில் வீசும் நேரமே,
ஆத்துமாக்கள் கோடிகளாய் பெருகும் காலமே -2