1. ketakam kanmalai thanysam thurukam thayaparan

கேடகம் கன்மலை தஞ்சம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1. கேடகம் கன்மலை தஞ்சம் துருகம் தயாபரன்
சிநேகிதர் பரிசுத்தர் வாசல் மேய்ப்பர் உத்தமர்
மகா பிரதான ஆசிரியர்,
எல்லாவற்றிலும் சிறந்தவர் ,
நித்திய ரட்சிப்பின் காரணர் ,
ராஜாக்களுக்கெல்லாம் ராஜா .
அப்பா அப்பா உம் நாமங்கள்
எத்தனை எத்தனை ஆயிரம்
சொல்லி சொல்லி நான் பாடிட
கோடி யுகங்கள் போதாதே -2
2. நீதியின் சூரியன் சத்திய ஆவியானவர்
படைகளின் ஆண்டவர் அக்கினிமயமானவர்
மரித்தோரில் முதல் பிறந்தவர்
சமாதானத்தின் தேவன் அவர்
ஜாதிகளை ஆளுபவர்
கர்த்தாதி கர்த்தாராம் யெகோவா –அப்பா
3. நாயகன் மணவாளன் மீட்பர் ஈஷி அதிசயம்
பூரணர் போதகர் ஆதி அந்தம் ஆலயம்
சர்வத்திற்கும் மேலானவர்
சதாகாலமும் இருக்கின்றவர்
உன்னதத்தில் உயர்ந்தவர்
இயேசு கிறிஸ்து என்னும் மேசியா – அப்பா
கேடகம் கன்மலை தஞ்சம் பாடல் வரிகள், Kedagam Kanmalai Thanjam Lyrics