1. kiristhuvin veerare

கிறிஸ்துவின் வீரரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1. கிறிஸ்துவின் வீரரே,
சர்வாயுதத்தையும்
கர்த்தர் ஈயும் பலத்தாலே
எழுந்தணிந்திடும்.
2. அத்திவ்விய பலத்தால்
வல்லமை அடைந்தார்,
சேனைக் கர்த்தாவை நம்பினால்
மெய் வீரர் ஆகுவார்.
3. அவர் மா பலத்தால்
ஸ்திரமாய் நின்றுமே
சர்வாயுதத்தைக் கர்த்தரால்
தரித்துக் கொள்ளுமே.
4.இருளின் சக்தியை
மிதித்து வெல்லவும்,
பலத்தின் மேலும் பலத்தை
அடைந்து போர் செய்யும்.
5.போர் ஓய்ந்து, வேலையை
முடித்த பின்னர் நீர்
கிறிஸ்துவால் வாடா கிரீடத்தை
அணிந்து கொள்ளுவீர்.
6. பிதாவும் ஆவியும்
உம்மோடு இயேசுவே
திரியேக தெய்வமாய் என்றும்
மகிமை ஏற்பாரே.
கிறிஸ்துவின் வீரரே பாடல் வரிகள், Kiristhuvin Veerarae lyrics