kiristhuvukkul therinthu konndu

கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொண்டு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொண்டு
முன்குறித்தாரே - சுவிகார
புத்திரராய் மாற்றிவிட்டாரே
தேவாதி தேவனவர் கர்த்தாதி கர்த்தரவர்
ஆவியானவரால் முத்திரையிட்டாரே
உள்ளான மனுஷனை பெலப்படுத்திடவே
வல்லமையின் ஆவியை தந்தவர் அவரே
பாவ சேற்றிலே மூழ்கிடாமலே
வெற்றி வாழ்க்கையில் வழுவிடாமலே
இயேசுவோடு சுதந்தரவாளியாய்
உரிமை சொத்துகளை சுதந்தரிப்போமே
அல்லேலூயாவே ஆமென் அல்லேலூயாவே
துதியெடுப்போமே சாத்தானை
முறியடிப்போமே
உன்னதங்களில் நம்மை உட்கார செய்து
தமது கிருபையினால் மேன்மை தந்தாரே
அவரின் மகிமைக்கு புகழ்ச்சியாகவே
அவர் இரத்தத்தினாலே நம்மை மீட்டுக்கொண்டாரே
ஆவியானவரே நமது சுதந்தரத்தின்
அச்சாரம் என்பதாலே மகிழ்ந்திடுவோமே